ETV Bharat / state

ஃபிபா உலகக்கோப்பையில் அசத்தவிருக்கும் தமிழ்நாடு வீராங்கனை - 17 வயது உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணியில் நாமக்கல் வீராங்கனை இடம்பிடித்துள்ளார்.

ஃபிபா உலகக்கோப்பையில் தமிழ்நாடு வீராங்கனை
author img

By

Published : Jul 28, 2019, 8:56 AM IST

பொதுவாக, எந்த விளையாட்டாக இருந்தாலும், தங்களது நாட்டுக்காக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பதுதான் அனைத்து வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும்.

சமீபத்தில் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் முடிந்த நிலையில், 2020இல் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடர் மூலம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை மாரியம்மாள் தனது கனவை நனவாக்கவுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களான பாலமுருகன் - காந்திமதி தம்பதியின் மகள் மாரியம்மாள் (17). இவர் தற்போது நாமக்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

கால்பந்து போட்டியில் தனது சகோதரரின் ஆர்வத்தைக் கண்ட இவர், எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கால்பந்து விளையாட தொடங்கியுள்ளார். இதையடுத்து, பத்தாம் வகுப்பு படித்த பின்னர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விடுதியில் சேர்ந்தார்.

அங்கு கால்பந்தாட்ட பயிற்சியாளர் கோகிலாவிடம் பயிற்சி மேற்கொண்டு தனது ஆட்டத்தை மெருகேற்ற தொடங்கினார். இதைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான போட்டிகளில் அசத்திய இவர், தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து தெலங்கானா, மணிப்பூர், ஒடிசா, மகராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற இவர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 12 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதனால், இவர் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணியில் 18 வீராங்கனைகளில் ஒருவராக தேர்வாகியுள்ளார். இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் இருந்து மாரியம்மாள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மாணவி மாரியம்மாள் கூறுகையில்,

"என்னுடைய சகோதரரால்தான் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் காட்டத்தொடங்கினேன். பின், எனது பயிற்சியாளர் கோகிலா எனக்கு தந்த சிறப்பான பயிற்சியின் மூலம், தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேர்வாகி உள்ளேன். நிச்சயம் இந்தத் தொடரில் நான் சாதிப்பேன்.

நான் கால்பந்து பயிற்சியாளராக ஆகவேண்டும் என்பதுதான் என எதிர்கால கனவு. என்னுடன் பயிற்சி பெறும் வீரர்களை இதேபோல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட வைப்பது என்னுடைய குறிக்கோள்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Intro:2020ல் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த நாமக்கல் வீராங்கனை

Body:2020ல் 'பிபா' நடத்தும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியில் நாமக்கல் வீராங்கனை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். உலகில் அதிக நாடுகள் விளையாடும் போட்டியில் கால்பந்து முக்கிய இடம் பெற்றுள்ளது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்கும் கனவாகும். அந்த கனவை சேலம் மாவட்டம் சங்ககிரி சேர்ந்த மாரியம்மாள்(17) நிறைவேற்றியுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி காந்திமதி. விசைத்தறி தொழிலாளர்களான இவர்களின் மகள் மாரியம்மாள்(17). இவர் தற்போது நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாரியம்மாள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கு பின்னர் நாமக்கல் விளையாட்டு விடுதியில் சேர்ந்து தன்னுடைய பயிற்சியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.

இதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விடுதியில் சேர்ந்தார். அங்கு கால்பந்து விளையாட்டில் தீவிர பயிற்சியை கால்பந்தாட்ட பயிற்சியாளர் கோகிலாவிடம் மேற்கொண்டார். பின்னர் மாவட்ட மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று சாதனையும் படைத்தார். அதன் பிறகு இந்திய தேசிய அளவிலான இளையோர் மகளிர் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதனையடுத்து தெலுங்கானா, மணிப்பூர்,ஒடிசா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடினர். கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற போட்டியில் 12 கோல்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றபெருமையே இவரையே சாரும். அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 18 பேரில் ஒருவராக மாரியம்மாள் தேர்வாகி உள்ளார். அதில் தமிழகம் சார்பில் மாரியம்மாள் மட்டுமே தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மாணவி மாரியம்மாள் கூறும்போது "தன்னுடைய சகோதரரால் தான் கால்பந்தாட்டம் விளையாட்டில் ஆர்வம் காட்டத்தொடங்கியதாகவும் தன் பயிற்சியாளர் கோகிலா தனக்கு நன்கு பயிற்சி அளித்ததாகவும் தெரிவித்தார். அவர் நன்கு பயிற்சிஅளித்ததின் விளைவாக தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டியில் தேர்வாகி உள்ளதாகவும் தான் இந்த போட்டியில் வெற்று பெறுவேன் எனவும் உறுதியளித்தார். மேலும் தன்னுடைய எதிர்கால கனவு தான் ஒரு பயிற்சியாளராக ஆகவேண்டும் எனவும் தன்னிடம் பயிற்சி எடுக்கும் மாணவர்களை இதேபோல் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட வைப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்தார்".

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.