ETV Bharat / state

பரமத்திவேலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு மனநல ஆலோசனைப் பயிற்சி!

author img

By

Published : Jul 18, 2020, 10:29 PM IST

Updated : Jul 28, 2020, 12:20 PM IST

நாமக்கல்: தூய்மைப் பணியாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, பரமத்தி வேலூரில் மாவட்ட மனநல அமைப்பு சார்பில் மனநல ஆலோசனைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Yoga class for cleaning labours in paramathivelur

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கரோனா தொற்று தடுப்புப் பணியில், கடந்த மூன்று மாதங்களாக இரவு, பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பணிச் சுமை காரணமாக, மனதளவில் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, பரமத்திவேலூரில் மாவட்ட மனநல அமைப்பு சார்பில் மனநல ஆலோசனைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக மாவட்ட மனநல ஆலோசகர் ரமேஷ் பயிற்சியளித்தார்.

இதில்,பேரூராட்சி அலுவலர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக கை தட்டல் பயிற்சி, மூச்சுப்பயிற்சி, பந்து பயிற்சி, வாய்விட்டு சிரிக்கும் பயிற்சி, பலூன் ஊதும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார்.

பரமத்திவேலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு மனநல ஆலோசனைப் பயிற்சி

இதில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் முகக் கவசம் அணிந்தும் பயிற்சியை மேற்கொண்டனர். இதில் பரமத்திவேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியம், தூய்மை ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated : Jul 28, 2020, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.