ETV Bharat / state

குடிநீருக்காக காலிக்குடங்களுடன் ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்! - WATER ISSUE

நாமக்கல்: புதுப்பாளையம் கிராமத்திற்கு 6 மாதமாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, அக்கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

காலிக்குடங்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு!
author img

By

Published : Apr 23, 2019, 10:13 PM IST

நாமக்கல் மாவட்டம், வேலக்கவுண்டம்பட்டி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

காலிக்குடங்களுடன் சென்ற புதுப்பாளைய கிராம மக்கள்

தீ.பரத்குமார்
நாமக்கல்

ஏப்ரல் 22

நாமக்கல் அருகே கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து  கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்த செருக்கலை ஊராட்சி புதுப்பாளையம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கிராம மக்கள் 50 மேற்பட்டோர் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

Script in mail
Visual in ftp

File name ; TN_NMK_03_22_WATER_ISSUE_VIS_7205944 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.