நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் கொல்லிமலையும் ஒன்று. சுமார் 1,000 முதல் 1,300 மீட்டர் உயரம் உள்ள இம்மலைத்தொடர் 280 சதுர பரப்பளவைக் கொண்டது. இங்கு பல நோய்களைக் குணப்படுத்த உதவும் அரியவகை மூலிகைகள் உள்ளதால், கொல்லிமலை மூலிகைகளின் அரசி, மூலிகை மலை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கொல்லிமலையில் சிற்றருவி, நம் அருவி, ஆகாய கங்கை அருவி ஆகியவை உள்ளன. கோடைகாலத்தை முன்னிட்டு சிற்றருவி, நம் அருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இருப்பினும் அருவிகளில் குளிக்கமுடியாமல் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன.
மற்ற அருவிகளைக் காட்டிலும் ஆகாய கங்கை அருவியில் அதிகமாக நீர் வரத்துக் காணப்படுகிறது. இதனால், பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.