ETV Bharat / state

வீடு புதுப்பிக்கும் பணி : சுவர் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி

author img

By

Published : Mar 31, 2021, 10:26 PM IST

Updated : Mar 31, 2021, 10:48 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே வீடு புதுப்பிக்கும் பணியின்போது, சுவர் இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடு கட்டுமானப்பணி : சுவர் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி
வீடு கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி - 4 பேர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் மதுரை வீரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கயல்விழி. இவருக்கு சொந்தமான பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 6 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டு இருந்த சுவர், பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், மாதேஸ்வரன் (50), அஞ்சலையம்மாள் (65 ) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக பரமத்திவேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலை: ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் டிவிஎஸ் நிறுவனம்

Last Updated : Mar 31, 2021, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.