நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலையில் இயற்கை நண்பர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியம் சுவாமி திருக்கோவில் பின்புறம் 27 நட்சத்திர வழிபாடு மரங்கள் கணபதி ஹோமம் செய்யப்பட்டு நடப்பட்டன.
பின்னர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டாயிரத்து இருபது மரங்கள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இதில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
![27 நட்சத்திர வழிபாடு மரங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:03:26:1596540806_tn-nmk-02-2020-trees-planting-script-vis-7205944_04082020165750_0408f_1596540470_421.jpg)