நாமக்கல் மாவட்ட நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் சுவாமிநாதனை ஆதரித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாமக்கல் பூங்கா சாலையில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த அனைவரையும் ஒன்றிணைத்து கூட்டணியை அமைத்து உள்ளனர்.வேட்பாளர் பட்டியல் தயார் செய்தபின் இவர்கள் யாரும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. ஏனென்றால் ஜெயலலிதாவின் ஆத்மா அவர்களை சும்மா விடாது என காட்டமாகக் கூறினார்.
அமைச்சர்கள் அனைவரும் தெலுங்கு படத்தில் வரும் மந்திரவாதிகள் போல் உள்ளனர். அவர்கள் அனைவரின் கைகளும் கட்டப்பட்டுள்ளன.
மேலும் மிஸ்டர் கிளீன் என்று அழைக்கப்படும் மோடி ஏன் இந்த சாக்கடையில் சேர்ந்தார் என தெரியவில்லை என விமர்சித்தார்.