நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசுப் போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணிபுரிகிறார் நேசமணி. இவர் தனது ஒரு மாத சம்பளமான 33 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என தொழிலாளர்களை கேட்டுக்கொண்டது.
இதனடிப்படையில், கரோனா நிவாரண நிதிக்கு அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கி வருகின்றனர். ஆனால், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றும் நேசமணியோ, பெருந்தன்மையுடன் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். 33 ஆயிரம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு அவர் இதற்காக வழங்கியுள்ளார்.
இது போன்று மற்றவர்களும் முதலமைச்சர் கரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கினால், அரசின் நிதி சுமை குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.