ETV Bharat / state

’தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்’ - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

author img

By

Published : May 26, 2021, 9:29 PM IST

நாமக்கல்: ஏழ்மையான மக்களின் சூழ்நிலையைக் கருதி தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்.

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. தினசரி இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து 500 பேர் வரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏழை மக்களின் சூழ்நிலை கருதி, தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் 448 நடமாடும் காய்கறி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 160 டன் எடை கொண்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 54.24 லட்சம் ஆகும்” என்றார்.

இதையும் படிங்க : 'பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கு அரணாக நிற்பேன்' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.