ETV Bharat / state

மதுபான விலை உயர்வால் ரூ. 2500 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் தங்கமணி தகவல் - பழங்குடியின சிறுவன் விவகாரம்

நாமக்கல்: மதுபான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரத்து 500 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Minister Thangamani meeting EB  அமைச்சர் தங்கமணி  மின் இழப்பை குறைக்க நடவடிக்கை  பழங்குடியின சிறுவன் விவகாரம்  current waste
அமைச்சர் தங்கமணி
author img

By

Published : Feb 8, 2020, 9:51 AM IST

நாமக்கல், வசந்தபுரம் ஊராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பூரண மதுவிலக்கு என்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கையாகும்.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுபானக்கடைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணி

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும். வருகின்ற கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் மின்தேவை 17ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும்.

அந்த மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். 21 விழுக்காடாக இருந்த மின் இழப்பை தற்போது 14 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதனை பத்து விழுக்காடாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை பழங்குடியின சிறுவனை கழற்ற வைத்தது குறித்த கேள்விக்கு, "அவர் தவறான நோக்கத்தில் இந்தச் செயலில் ஈடுபடவில்லை. தனது தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்ட நிலையில் அதனை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலாக்க முயற்சிக்கிறார்" என்றார்.

இதையும் படிங்க: 'நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்'- அதிரடி சுப்பிரமணியன் சுவாமி

Intro:அரசின் வருவாயை பெருக்கவே மது விலை அதிகரிப்பு, விலை அதிகரிப்பால் அரசுக்கு 2500 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பேட்டிBody:நாமக்கல் அடுத்த வசந்தபுரம் ஊராட்சியில் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி கலந்து பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, பூரண மதுவிலக்கு என்பதே தமிழக அரசின் கொள்கையாகும், படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருவதாகவும் தற்போது தமிழகத்தில் 5152 டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும், இதில் 2000 டாஸ்மாக் கடைகளில் மட்டுமே பார் வசதிகள் உள்ளதாகவும், அரசின் வருவாயை பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் எனவும், கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தின் மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும் எனவும், அந்த மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும் எனவும், 21 சதவீதமாக இருந்த மின் இழப்பை தற்போது 14 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளதாகவும், அதனை 10 சதவீதமாக குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை பழங்குடியின சிறுவனை கழற்றிய விவகாரம் குறித்து கேட்ட போது அமைச்சர் தவறான நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபடவில்லை எனவும், அவர் தனது தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்ட நிலையில், அதனை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.