நாமக்கல் மாவட்டத்தில் அண்மையில் கனமழை பெய்து வருகிறது. அப்போது, ராமாபுரபுதூர் அடுத்துள்ள அன்பு நகரில் திடீரென பலத்த சத்தத்துடன் கூடிய இடியானது முருகேசன் என்பவரின் காலி நிலத்தில் விழுந்துள்ளது. இடியின் தாக்கத்தால் எதிர்பாராத விதமாக நீர் ஊற்று உருவாகி, தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. இதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர் கூறுகையில்," இடியானது நிலத்தைத் தாக்குவது அரிதான செயல். அண்மையில் இரவு முழுவதும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக நிலத்தில் இடி தாக்கியதும் நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு..!