கரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் உழவர் சந்தை வெளிpபுறம் உள்ள காய்கறி கடையில் வீடுகளுக்கு தேவையான அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்க பொதுமக்கள் காலை முதலே அதிக அளவில் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து 300க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடினர்.
இதேபோல் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி தங்களது காய்கறியை வாங்கிய நிலையில் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்குப் போதுமான காய்கறிகள் கிடைக்காது என கருதி அதிக அளவில் காய்கறிகளை வாங்க காலையிலேயே பொதுமக்கள் குவிந்தனர்.
இதையும் படிங்க: 'தனிமை நம் எதிர்காலத்தின் இனிமை' - பிரதமரின் முடிவை வரவேற்கும் ஓபிஎஸ்