நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மலையாள தெய்வத்திற்கு, வருடந்தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஆண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்று விழாவை நடத்துவார்கள்.
இவ்வாறு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த திருவிழா, கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் நேற்றிரவு திருவிழா நடைபெற்றது. இதில், நள்ளிரவில் மலையாள தெய்வத்திற்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்திருந்த 206 ஆடுகள் பலியிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து அனைவருக்கும் சமபந்தி வழங்கப்பட்டது. இதில் பெண்கள் பங்கேற்க கூடாது என்பதால், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே நீண்ட வரிசையில் நின்று சமபந்தி கிடா விருந்து அருந்தினர்.
இந்நிழச்சியில் சென்னை, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாரியம்மன் கோவில் திருவிழா - கூழ் அண்டாவில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு