நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் கொங்களம்மன் கோயில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர் பாடம் எடுக்கும் எட்டாம் வகுப்பில் 8 மாணவிகளும், ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் 8ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபசமாகப் பேசுவதாக பெற்றோர் மாவட்ட கல்வித் துறை அலுவலரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலர் மாணவிகளிடம் விசாரித்தபோது, ஆசிரியர் சுரேஷ் நிர்வாண சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து கூறிவந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாணவியாக அழைத்து உடல் உறுப்புகள் குறித்து கொச்சையாகவும் பேசியுள்ளார்.
மேலும், மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு