ETV Bharat / state

'பிரிவினையைத் தூண்டும் திமுக, காங். உள்ளிட்ட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்!' - நாமக்கல் மாவட்டம்

நாமக்கல்: இந்து, இஸ்லாமிய மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் திமுக, காங்கிரஸ்,‌‌‌ திக உள்ளிட்ட கட்சிகளைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் பேரியக்கத் தலைவர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இப்ராகிம்
ibrahim
author img

By

Published : Dec 11, 2020, 6:33 AM IST

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் பேரியக்கத் தலைவர் இப்ராகிம் இன்று (டிச. 10) நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு அப்பகுதியிலேயே இடுகாட்டிற்கு நிலம் ஒதுக்கித் தரவேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் பேரியக்கத் தலைவர் இப்ராகிம்

அப்போது அவர், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களை இந்து மக்களிடமிருந்து பிரித்து சதிச் செயலை செய்துவருகின்றனர்.

மதத்திற்கு எதிரான, மத நம்பிக்கைக்கு எதிரான, மதத்தை இழிவுபடுத்தி பிரிவினையைத் தூண்டும் காங்கிரஸ், திமுக, திக கட்சிகளைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். பரமத்தி வேலூர் அடுத்துள்ள பாண்டமங்கலம் இஸ்லாமிய மக்களுக்கு இடுகாட்டிற்கு நிலம் ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் பயணம் விவசாயிகளின் அச்சத்தை போக்கியிருக்கிறது - அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.