கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள், தொழில் அதிபர்கள், தனியார் நிறுவனத்தினர், தொண்டு நிறுவனத்தினர் யாரேனும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
அதையடுத்து பல்வேறு அமைப்பினர், நடிகர்கள், தனியார் நிறுவனத்தினர் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் கரோனா நிவாரண நிதி வழங்கிவருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் சார்பில் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை வினோதன், சந்தியாகு இருவரும் மாவட்ட ஆட்சியர் மெகராஜை சந்தித்து வழங்கினர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: மீனவர் சங்கம் சார்பில் நிதியுதவி பெற்ற மீனவர்கள்