கொரோனோ வைரஸ் நோய் தொற்றால் சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி 2 ஆயிரத்திற்கு மேல் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், உலகில் பல நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது. இந்நோய் அறிகுறி சீனாவிலிருந்து இந்தியா வந்த கேரளாவை சேர்ந்த மூன்று பேருக்கு நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களும் குணமடைந்தனர்.
இருந்தபோதிலும் கொரோனோ வைரஸ் தொற்று கோழிகளிலிருந்து பரவிவருவதாகக் கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவிவருகிறது.
இதனால் கறிக்கோழிகளையும் முட்டைகளையும் மக்கள் வாங்கி உண்பதற்கு அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக வளர்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, மறைமுகமாகக் கோழி தீவனங்களை உற்பத்திசெய்யும் மக்கள் என அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனோ வைரஸ் கோழியினால்தான் பரவிகிறது எனத் தவறான தகவலைப் பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறிக்கோழி பண்ணையாளர்கள், முட்டை பண்ணையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...பாதுகாப்புப் படைகள் இல்லாததே வன்முறைக்கு காரணம் - டெல்லி காவல் துறை