ETV Bharat / state

பணத்திற்காக தாயை தாக்கிய மகன் - அதிர்ச்சியளிக்கும் வீடியோ - son attacked his mother in namakkal

நாமக்கல் அருகே பணத்திற்காக தாயை அடித்து சாலையில் தரதரவென இழுத்து கொடுமைப்படுத்தும் மகன், மருமகளின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தாயை அடித்த மகன், நடுரோட்டில் தாயை தாக்கிய மகன், நாமக்கலில் தாயை தாக்கிய மகன், namakkal son attacked his mother, namakkal
பணத்திற்காக நடுரோட்டில் தாயை தாக்கிய தனயன்
author img

By

Published : Aug 22, 2021, 6:13 AM IST

Updated : Aug 22, 2021, 7:06 AM IST

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிபட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள்(65). இவர் விவசாய கூலி வேலை செய்துவருகிறார். இவரது கணவர் சின்னசாமி கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இவரது மகள் கோமதி, மகன் சண்முகம் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.

கணவர் சின்னசாமி இறந்துவிட்டதால், நல்லம்மாள் தனி வீட்டில் இருந்துகொண்டு 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும், நகைகளை விற்றப்பணம் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை வங்கியில் போடுவதற்காக வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருக்கும் பணம் ரூ. 3 லட்சத்தையும், குடியிருக்கும் வீட்டினையும் தனக்கு கொடுக்கும்படி மகன் சண்முகம், தாய் நல்லம்மாளிடம் அடிக்கடி பிரச்னை செய்துவந்துள்ளார்.

சாவியை பிடுங்க முயற்சி

இந்நிலையில் சண்முகம், சண்முகத்தின் மனைவி ஜானகி ஆகியோர் நேற்று முன்தினம் (ஆக. 20) மாலை வேலையில் இருந்து வந்துகொண்டிருந்த நல்லம்மாளிடம் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டனர். இதில் ஒரு கட்டத்தில் நல்லம்மாளின் கையில் வைத்திருந்த வீட்டு சாவியை பிடுங்குவதற்காக சண்முகமும், அவரது மனைவியும் நல்லமாளின் கையை பிடித்து தரதரவென இழுத்து அவரை தாக்கியுள்ளனர்.

நடுரோட்டில் தாய் நல்லம்மாளை தாக்கும் மகன் சண்முகம்

இதில், படுகாயமடைந்த நல்லமாளை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பணத்திற்காக தாயை சாலையில் வைத்து அடித்து, கையை பிடித்து தரதரவென இழுத்து கொடுமைப்படுத்தும் மகன், மருமகளின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நல்லம்மாள் நலம்

தாயை அடித்த மகன், நடுரோட்டில் தாயை தாக்கிய மகன், நாமக்கலில் தாயை தாக்கிய மகன், namakkal son attacked his mother, namakkal
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லம்மாள்

இதுகுறித்து நல்லம்மாள், தான் வைத்திருக்கும் பணத்திற்காகவும், குடியிருக்கும் வீட்டினை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என தனது மகன் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார். மேலும், அவரது மகன் சண்முகத்திற்கு நல்லம்மாளின் கணவர் உயிரோடு இருக்கும் போதே, 4 1/2 ஏக்கர் விவசாய நிலத்தை எழுதி கொடுத்துள்ளதாகவும், ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலக மூத்த குடிமக்கள் நாளில் பெற்றோருக்குச் செய்யப்போவது என்ன?

Last Updated : Aug 22, 2021, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.