நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். பிள்ளைகளின் விடுமுறை தினத்தை முன்னிட்டு, தன் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது அனைவரும் நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த சமயத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக ஒருவர் நீரில் மூழ்க, அவரை காப்பாற்றும் பொருட்டு ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து நீரில் மூழ்கிய 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.
ஆனால் ஹர்ஸ்விகா என்ற சிறுமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுமியின் உடல் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து, 4 கிமீ தொலைவில் உள்ள அணிச்சம்பாளையம் என்ற கிராமத்தில் மீட்கப்பட்டது.