நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 5,000 மாணவர்களும், நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 2,000 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
நேற்று காலை நாமக்கல், சேலம்,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் பள்ளி அலுவலகம்,நீட் தேர்வு மையம் அலுவலகம், பள்ளியின் இயக்குனர்கள் சரவணன், குணசேகரன், மோகன்,சுப்பிரமணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பள்ளி மாணவர்கள் சேர்க்கை, நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் விவரங்கள், அவர்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டணங்கள் குறித்த ஆவணங்கள், நிர்வாக இயக்குனர்கள், அவர்களின் உறவினர்களுடைய சொத்து விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்றும் இந்த வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. மேலும் ரூ.150 கோடிக்கும் மேலாக கணக்கில்காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்கலாமே: நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறை சோதனை: ஸ்டாலின் ட்வீட்!