நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகளும் (15), வெங்கமேடு கபிலர்மலை சாலையில் வசித்துவரும் ராஜ் என்பவரது மகனும் (16) காதலித்துவந்துள்ளனர்.
இருவரும் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பரமத்திவேலூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டு சிறுவனின் வீட்டில் தங்கியுள்ளனர். சிறுவனும், சிறுமியும் திருமண வயதை அடையாதவர்கள் என திருச்செங்கோடு உதவி ஆட்சியர் மணிராஜ்க்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் வருவாய் துறையினர், நாமக்கல் குழந்தைகள் நல அலுவலர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இத்திருமணம் நடந்துள்ளதால் சிறுவர்களின் பெற்றோர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க... சிறுமிக்குத் திருமணம்: போக்சோவில் ஒருவர் கைது!