சாலை பாதுகாப்பு வார விழாவை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர், தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து நடைப்பயண விழிப்புணர்வு பேரணி நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலையில் தொடங்கியது.
அங்கிருந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையில் பேரணி நிறைவு பெற்றது. அதில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்றனர்.
இதையும் படிங்க: சாலைப் பாதுகாப்பு, விபத்துகள் குறித்து விழிப்புணர்வுப் பேரணி...