நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த ராமநாதபுரம் புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நகை கடன் மற்றும் பயிர் கடன்களை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வங்கியில் நகை கடனோ, பயிர் கடனோ வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்களும், விவசாயிகளும் நகை கடன் வழங்காததை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி அலுவலர்கள் பேச்சுவர்த்தை நடத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேந்தமங்கலம் காவல் துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இன்று 5 நபருக்கும் திங்கட்கிழமை மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக நகை கடன் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:'நகை கடன் தள்ளுபடி இல்லை' - அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டம்