பெங்களூரில் இருந்து தேர்தல் பணிக்காக துணை ராணுவப் படை வீரர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காவல் வாகனத்தில் அழைத்துச் செல்ப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி அருகே வாகனம் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கியவர்கள் என்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சுதாகர் (26), ஏ.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கனரக வாகனம் உரசியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் மரணம்