நாமக்கல் மாவட்டம், பெரிய மணலியில் இருந்து துணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. இந்த மினி லாரியை பெரியமணலியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 5 பேர்கள் வந்தனர்.
இதையடுத்து, நாமக்கல்லிலிருந்து கரூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் மினிலாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி பாலத்தின் நடுவே கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த சுரேஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள், சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், மினிலாரியின் பின்னால் அமர்ந்து வந்த மற்ற மூன்று நபர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் காவிரி பாலத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி வேலூர் போலீசார், கிரேன் வாகனம் மூலம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மினி லாரியை பாலத்தின் ஓரமாக கொண்டு சென்றனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஓட்டைப் பிரித்து 22 சவரன் தங்க நகைகள், ரூ.1.3 லட்சம் கொள்ளை