ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன் காரணமாக, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 24) காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அதில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கருவேப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜமூனா நல்லக்குமார், காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடியுடன் உரையாற்றினார்.
அப்போது, கரோனா நோய் தொற்று இந்தியாவில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் கிராம ஊராட்சிகளில் தகுந்த இடைவெளி, சுகாதாரம் குறித்தும் கலந்துரையாடினார். மேலும், மின்னணு கிராம சிவராஜ் இணையதள சேவையும் அதன் மொபைல் செயலி திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த கலந்துரையாடலை தனது கிராம மக்களும் பார்க்கவேண்டும் என எண்ணிய ஊராட்சி மன்ற தலைவர் ஜமூனா, பிரதமரின் காணொலி காட்சிகளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திரையிட்டு தகுந்த இடைவெளியுடன் கிராம மக்கள் அமர்ந்து கண்டு களித்தனர்.