ETV Bharat / state

#HBDAnna111: இருமொழிக் கொள்கை அண்ணா வகுத்துக் கொடுத்த ஜீவக் கொள்கை! - வைரமுத்து - அண்ணாவின் இருமொழிக் கொள்கை

நாமக்கல்: இருமொழிக் கொள்கை என்பதுதான் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்துக் கொடுத்த அழியாத ஜீவக் கொள்கை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

vairamuthu
author img

By

Published : Sep 15, 2019, 6:28 PM IST

நாமக்கல்லில் இன்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில், வைரமுத்து கலந்துகொண்டு நூலினை வெளியிட, அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பெற்றுக்கொண்டார்.

அப்போது உரையாற்றிய வைரமுத்து, ”உலகில் உள்ள செம்மொழி பட்டியலில் பழமை வாய்ந்த தமிழும், சீன மொழியும் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. பிறமொழி சொற்கள் தமிழுக்கு வந்தாலும் அதனை தமிழாக்கம் செய்து உச்சரிக்க வேண்டும். 69 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 101 முறை திருத்தப்பட்டுள்ளது, ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் எழுதிய தொல்காப்பியம் இதுவரை ஒருமுறைகூட திருத்தப்படவில்லை. ஒளியை விட வேகமாக செல்வது சொல் எனவும் அந்த சொல்லை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். ஒரு சொல் ஒரு ஒரு லட்சம் உயிர்களை அழிக்கும் வல்லமையும், அதே சமயம் ஒரு லட்சம் உயிர்களை காக்கும் வல்லமையும் பெற்றது.

vairamuthu
விழாவில் கவிஞர் வைரமுத்து

நாம் தமிழை இழந்தால் நம் நிலத்தை இழக்க நேரிடும். நிலத்தை இழக்க நேரிட்டால் நாம் எங்கே செல்வது என்பது கேள்விக்குறியாகிவிடும். காற்று, சுவாசம் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்று மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமந்திரம் மூலம் அறிவியல் உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர் திருமூலர் என்ற தமிழர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட கூடாது. தயவுசெய்து அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்டுங்கள்” எனக் கூறினார்.

vairamuthu
ஆட்டோகிராப் போடும் கவிஞர் வைரமுத்து

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, "இந்தி மொழி இந்தியாவை இணைக்கும் மொழி என்ற கருத்து நேற்று உரைக்கப்பட்டது. இது தமிழருக்கு மட்டுமல்ல இந்தி மொழி பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது, இருமொழிக் கொள்கை என்பதுதான் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்துக் கொடுத்த அழியாத ஜீவக் கொள்கை. இந்த இருமொழி கொள்கைக்கு தமிழர்களும் உறுதியாக இருப்பார்கள் இந்த அரசும் உறுதுணையாக இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்”, என தெரிவித்தார்.

Intro:இந்தியவை இணைப்பது இந்தி என்ற கருத்து தமிழருக்கு மட்டுமல்ல இந்தி மொழி பேசாத மக்களுக்கும் உடன்பாடு இருக்காது, நாம் தமிழை இழந்தால் நம் நிலத்தை இழக்க நேரிடும் எனவும் நிலத்தை இழக்க நேரிட்டால் நாம் எங்கே செல்வது என்பது கேள்விக்குறியாகிவிடும் நாமக்கல்லில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு.Body:இந்தியவை இணைப்பது இந்தி என்ற கருத்து தமிழருக்கு மட்டுமல்ல இந்தி மொழி பேசாத மக்களுக்கும் உடன்பாடு இருக்காது, நாம் தமிழை இழந்தால் நம் நிலத்தை இழக்க நேரிடும் எனவும் நிலத்தை இழக்க நேரிட்டால் நாம் எங்கே செல்வது என்பது கேள்விக்குறியாகிவிடும் நாமக்கல்லில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

நாமக்கல்லில் இன்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துக்கொண்டு நூலினை வெளியிட அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பெற்று கொண்டார்.

பின்னர் ஏற்புரை ஆற்றிய வைரமுத்து உலகில் உள்ள செம்மொழி பட்டியலில் பழமை வாய்ந்த தமிழும், சீன மொழியும் மட்டுமே வழக்கத்தில் உள்ளதாகவும், பிறமொழி சொற்கள் தமிழுக்கு வந்தாலும் அதனை தமிழாக்கம் செய்து உச்சரிக்க வேண்டும், 69 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 101 முறை திருத்தப்பட்டுள்ளது, ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் எழுதிய தொல்காப்பியம் இதுவரை ஒருமுறை கூட திருத்தப்படவில்லை எனவும், ஒளியை விட வேகமாக செல்வது சொல் எனவும் அந்த சொல்லை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம் எனவும், ஒரு சொல் ஒரு ஒரு இலட்சம் உயிர்களை அழிக்கும் வல்லமையும், அதே சமயம் ஒரு இலட்சம் உயிர்களை காக்கும் வல்லமையும் பெற்றது. நாம் தமிழை இழந்தால் நம் நிலத்தை இழக்க நேரிடும் எனவும் நிலத்தை இழக்க நேரிட்டால் நாம் எங்கே செல்வது என்பது கேள்விக்குறியாகிவிடும் எனவும் பேசினார். மேலும் வடக்கே கண்ணன் என்ற ஒரு இடையன் கீத உபதேசம் செய்யும் போது, தென்னாட்டில் திருமூலர் என்ற ஒரு இடையர் திருமந்திரம் எழுத முடியாதா? காற்று, சுவாசம் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்று 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமந்திரம் மூலம் அறிவியல் உண்மையை உலகுக்கு எடுத்து சொன்னவர் திருமூலர் என்ற தமிழர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட கூடாது எனவும் தெரிவித்தார். தயவு செய்து அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தமிழிலே பெயர் சூட்டுங்கள் என கோரிக்கையும் விடுத்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து "இந்தி மொழி இந்தியாவை இணைக்கும் மொழி என்ற கருத்து நேற்று உரைக்கப்பட்டது, இது தமிழருக்கு மட்டுமல்ல இந்தி மொழி பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது, இருமொழி கொள்கை என்பது தான் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்துக் கொடுத்த அழியாத ஜீவக் கொள்கை. இந்த இருமொழி கொள்கைக்கு தமிழர்களும் உறுதியாக இருப்பார்கள் இந்த அரசும் உறுதுணையாக இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.