ETV Bharat / state

கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி! - No power cut in summer -Minister Thangamani

நாமக்கல்: தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.

கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது -அமைச்சர் தங்கமணி உறுதி!
கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது -அமைச்சர் தங்கமணி உறுதி!
author img

By

Published : Jan 31, 2020, 10:44 PM IST

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதற்கூட்டம் இன்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறைஅமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுடன் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடைக்காலத்தில் தமிழ்நாட்டிற்கான மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட் கையிருப்பில் உள்ளதால் மின்வெட்டை சமாளிக்க போதிய மின்சாரம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில், ஒரு நிமிடம் கூட கோடைக்காலத்தில் மின் தடை ஏற்படாது எனத் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும் அவர், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தயாநிதிமாறன், அமைச்சர் ஜெயகுமார் மீது குற்றச்சாட்டு வைப்பதற்கு தகுதி வேண்டும் என்றும், மக்களுக்கு சேவை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டத்தை கையில் எடுப்பது சரியல்ல எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

Intro:கோடைக்காலத்தில் தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பேட்டி
Body:நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதற்கூட்டம் இன்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்துறைஅமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா மற்றும் துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கோடை காலத்தில் தமிழகத்தில் மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட் கையிருப்பில் உள்ளதாகவும் மின்வெட்டை சமாளிக்க போதிய மின்சாரம் உள்ளதாகவும், ஒரு நிமிடம் கூட கோடை காலத்தில் மின் தடை ஏற்படாது என்றும், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தயாநிதிமாறன், அமைச்சர் ஜெயகுமார் மீது குற்றச்சாட்டு வைப்பதற்கு தகுதி வேண்டும் என்றும், டி.என்.எஸ்.பி தன்னாட்சி பெற்ற அமைப்பாகும் இதில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ் மதுபான பார்களில் ஆய்வு செய்வது குறித்து கேட்ட போது "மக்களுக்கு சேவை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர் சட்டத்தை கையில் எடுப்பது சரியல்ல என்றும், பாரில் ஆய்வு என்பது வாக்களித்த மக்களை ஏமாற்றுவது போல உள்ளது. சட்டத்தை கையில் எடுத்தால் அது வேறு மாதிரி போய் விடும் எனவும், அனுமதி இல்லாத பார்களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காலில் விழுவதற்கு இது பெரிய பிரச்சினை இல்லை" எனவும் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.