ETV Bharat / state

நாமக்கல்லில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு

நாமக்கல்: புதியதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
author img

By

Published : Mar 5, 2020, 6:51 PM IST

Updated : Mar 5, 2020, 11:42 PM IST

நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சி.விஜயபாஸ்கர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் ரூ. 1167.21 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 34.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசுக் கட்டடங்களை திறந்து வைத்து 33,141 பயனாளிகளுக்கு ரூ. 134.37 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் முதலமைச்சர் பேசும்போது, "நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணை, ஜவ்வரிசி, விசைத்தறி, போர்வெல், லாரி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குகிறது. உலகிலேயே சிறந்த மருத்துவ சேவை கிடைக்கும் இடமாக தமிழ்நாடு மாறி வருகிறது. சென்ற 9 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு உருவாக்கி உள்ளது" என்றார்.

மேலும், தண்ணீர் பிரச்னை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை காவிரியின் உபரி நீர் மூலம் நிரப்பும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் எனப் பேசினார்.

மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

கடந்த சில நாள்களுக்கு முன்னர் ராமநாதபுரம், விருதுநகரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - முதலமைச்சர் பழனிசாமி..!

Last Updated : Mar 5, 2020, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.