நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாகக் கூடாது எனபதற்காக காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள் ஒரு சிலக் கட்டுபாடுகளுடன் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
அதேபோல் உணவங்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனை பயன்படுத்தி நாமக்கல்லில் உள்ள சில உணவக உரிமையாளர்கள் உணவகத்துடன் சேர்த்து தேநீர் கடைகளையும் திறந்து தேநீர் மற்றும் பலகார விற்பனையில் ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்கள் கடைகளில் கூடி சமூக இடைவெளியை புறக்கணித்தனர்
இதனிடையே பொதுமக்கள் அதிகம் கூடுவதை அறிந்த நாமக்கல் காவல் துறையினர் பரமத்தி சாலை, மோகனூர் சாலை, டாக்டர் சங்கரன் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட தேநீர் கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்களை எச்சரித்து கடைகளை மூடி அங்கிருந்த எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : தனிமைப்படுத்துதல்: தப்பியவா்களை கண்டுபிடிக்க மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை