நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக நேற்று கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.
ராசிபுரம் ஒன்றியத்திற்கான தேர்தல் ஆண்டலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளூவர் கலை கல்லூரியில் நடைபெற்றது. குறுக்குபுரம் பஞ்சாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஆயிரத்து 670 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளை கையில் தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டது. பனங்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ஜக்கிரியா என்பவரது மகள் ஆயிஷாபானு (21). மாற்றுத்திறனாளியான இவர் தனது முதல்வாக்கினை செலுத்த வத்ர். வாக்குச்சாவடியில் சக்கரநாற்காலி இல்லாததால் அவரது சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி சென்று வாக்களிக்க உதவினார்.
இதையும் படிங்க: வாக்காளர்களின் வாக்கை செலுத்திய அதிமுக பிரமுகர் - கிளம்பிய சர்ச்சை