ETV Bharat / state

வாழ்விழந்தவர்களுக்கு வாழ்வளித்துவரும் டிஜிட்டல் தெருக்கூத்துக் கலைஞர்கள்! - சிறப்புப் பார்வை - டிஜிட்டல் தெருக்கூத்துக் கலைஞர்கள்

எலச்சிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தெருக்கூத்துக் கலைஞர்கள் கரோனா ஊரடங்கு சூழலில் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க மேற்கொண்ட வழிகள் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கையிலெடுத்து வருவாய் ஈட்டிவருகின்றனர் இத்தெருக்கூத்துக் கலைஞர்கள்...

therukoothu
டிஜிட்டல் தெருக்கூத்துக் கலைஞர்கள்
author img

By

Published : Jul 25, 2020, 2:27 PM IST

Updated : Jul 25, 2020, 4:44 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 60க்கும் மேற்பட்ட தெருக்கூத்துக் கலைஞர்கள் குடும்பமாக வசித்துவருகின்றனர். கோயில் திருவிழா சமயங்களில் இக்கலைஞர்கள் தெருக்கூத்து நடத்துவது வழக்கம். கரோனா பரவலைத் தடுக்க மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்துவருகிறது.

இதன் காரணமாக வருவாய் இழந்துள்ள தங்களுக்கு அரசு வழங்கிய நிவாரண உதவிகள் போதுமானதாக இருந்ததாகக் கூறும் தெருக்கூத்துக் கலைஞர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒன்றுகூடவும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளை இழந்துள்ள தெருக்கூத்துக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கலையை வளர்க்கவும், தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு உதவவும் சுவிக்சம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவருகின்றனர்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுகுறித்தான விளம்பரங்களைப் பதிவிட்டு, நிகழ்ச்சியை இணையத்தில் காண பதிவுசெய்யுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கான பதிவுக் கட்டணம் 50 ரூபாய்தான் என்று கூறியிருக்கின்றனர் டிஜிட்டல் தெருக்கூத்துக் கலைஞர்கள்.

டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!

இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் முயற்சியாக இணையம் வழியாக நேரடியாகத் தெருக்கூத்து நிகழ்த்தும் முயற்சியை மேற்கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக ”பீஷ்மர் பிறப்பு” என்ற கதை இணையம் வழியாக அரங்கேற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட தெருக்கூத்து ரசிகர்கள் இணையம் வழியாக மிகக் குறைந்த கட்டணம் செலுத்தி, இந்தத் தெருக்கூத்தினைக் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்துப் பேசிய எலச்சிபாளையத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் வ. ராம், "நாடக தலைப்புக்குத் தேவையான பாத்திரங்களில் 15 முதல் 20 போ் வரை பங்கேற்பர். ஆண்டுதோறும் பங்குனி முதல் புரட்டாசி மாதம் வரை திருவிழாக் காலம். விழாக் காலங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டுதான் குடும்பம் நடத்த முடியும். ஒவ்வொரு தெருக்கூத்து நிகழ்ச்சிக்கும் தொலைவைப் பொறுத்து குறைந்தது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை பெறுவோம்.

அதைச் சமமாக அனைவரும் பிரித்துக் கொள்வோம். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையால் தெருக்கூத்துக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தோம். இந்நிலையில், புது முயற்சியாக இணையம் வாயிலாகத் தெருக்கூத்து நடத்த திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். இனிவரும் காலங்களில் இணையம் வாயிலாகவே தெருக்கூத்து நாடகங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

காடுகளின் கவசம் யானைகள்!

மேலும், ”அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் இணையம் வாயிலாகப் புது முயற்சியாக தெருக்கூத்து நடத்தியதாகவும், தங்களது குழுவில் பெரும்பாலான இளைஞர்கள் படித்த பட்டதாரிகளாகவும் தங்களுக்குத் தெருக்கூத்து நடத்துவதுதான் பரம்பரை தொழிலாகும். இதனால் பல இடங்களில் வேலை கேட்டுச் சென்று அவமானம் மட்டுமே சந்தித்துள்ளோம்.

வாழ்விழந்தவர்களுக்கு வாழ்வளித்துவரும் டிஜிட்டல் தெருக்கூத்துக் கலைஞர்கள் - சிறப்புப் பார்வை

ஆனால், இந்த ஊரடங்கு நாடகக் கலைஞர்களுக்குப் பெரும் இடியாக அமைந்தது. நான்கு மாதங்களாக எவ்வித வருவாயின்றி தவித்துவந்த நிலையில், நண்பர்களின் ஆலோசனையுடன் இன்று இணையம் வாயிலாக தெருக்கூத்து நாடகம் நிகழ்த்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம்” என்றார்.

பாராம்பரியக் கலைகளைப் பாதுக்காக்க இதுபோன்ற தொழில்நுட்பம் தங்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது என்கிறார்கள் எலைச்சிப்பாளையத்தைச் சேர்ந்த இசைக்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற நாடகக் கலைஞர் தினேஷ் மற்றும் வெங்கடேஷ்.

Last Updated : Jul 25, 2020, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.