ETV Bharat / state

குடும்ப பிரச்னை: தாய், மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.! - mother daughter sucide

நாமக்கல்: குடும்ப பிரச்னை காரணமாக தாயும், மகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மோகனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

mother daughter sucide
author img

By

Published : Aug 4, 2019, 7:05 PM IST

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். கூலி தொழிலாளியான இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், அகல்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு கண்ணையன் குடும்பத்தாருடன் அந்தப் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்த கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபித்து கொண்டு கண்ணகி தனது மகளை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால், அவரது உறவினர்கள் இருவரையும் இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்று காலையில் மோகனூர் ரயில்நிலையம் அருகே இருவரும் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

தாய்,மகள் தற்கொலை

இதனையடுத்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:நாமக்கல் அடுத்த மோகனூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தாயும் மகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Body: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த பரளி ஊராட்சி ஒத்தையன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் கூலி தொழிலாளியான இவருக்கு கண்ணகி என்ற மனைவியும் அகல்யா என்ற +2 படிக்கும் மகளும் உள்ளனர். மகள் வளையப்பட்டி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடி பெருக்கை ஒட்டி கண்ணையன் குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கண்ணகியும், மகள் அகல்யா இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தாயையும் மகளையும் இரவு முழுதும் தேடி நிலையில் இன்று காலை மோகனூர் அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இருவர் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற கண்ணையன் மற்றும் உறவினர்கள் அவரது உடல்களை அடையாளம் காட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரவா அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டனர் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.