நாமக்கலை அடுத்த ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் நாமக்கல் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். இவர் காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளனர்.
மாலை வீடு திரும்பிய பார்வதி வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிலிருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடுபோனதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பார்வதி அளித்த புகாரின் பேரில் நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'இனி எம்பிபிஎஸ் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்' - துணைவேந்தர் சுதா சேஷய்யன்