ETV Bharat / state

நாமக்கல்லில்கனமழை... அக்கரைப்பட்டி ஏரி அணைக்கட்டு உடைப்பு! - திருமணிமுத்தாறு வெள்ளப்பெருக்கு

நாமக்கல்: திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அக்கரைப்பட்டி ஏரி அணைக்கட்டு உடைந்துள்ளது.

வெள்ளப்பெருக்கு
author img

By

Published : Sep 25, 2019, 4:28 PM IST

நாமக்கல் ராசிபுரம் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அக்கரைப்பட்டி ஏரியின் அணைக்கட்டு உடைந்ததின் காரணமாக வெள்ளநீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு பாய்ந்து ஓடுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக பாய்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

namakkal hevay rains
தென்னை மரங்கள் சேதம்

நேற்று சேலம், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் கன மழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதியம்பட்டி அருகே அக்கரைப்பட்டியில் ஏரியின் அணைக்கட்டு உடைப்பு ஏற்பட்டு, அந்நீரானது விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

இதனால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, சோளம், நெல் ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கின. உரிய அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கலில் அக்கரைப்பட்டி ஏரி அணைக்கட்டு உடைப்பு!

இதையும் படியுங்க: திருமணிமுத்தாற்றில் பொங்கும் நுரை - அச்சப்படும் மக்கள்!

Intro:வெண்ணந்தூர் அக்கரைப்பட்டி ஏரி அணைக்கட்டு உடைந்து வெள்ளம். விவசாய நிலங்கள் பாதிப்புBody:நாமக்கல் இராசிபுரம் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அக்கரைப்பட்டி ஏரியின் அணைக்கட்டு உடைந்ததின் காரணமாக வெள்ளநீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு பாய்ந்து ஓடுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வழியாக பாய்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் நேற்று சேலம் மற்றும் நாமக்கல் சுற்று வட்டாரங்களில் கன மழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் திருமணிமுத்தாறு வெள்ளப்பெருக்கினால் மதியம்பட்டி அருகே அக்கரைப்பட்டியில் ஏரியின் அணைக்கட்டு உடைப்பு ஏற்பட்டு நீரானது விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, சோளம்,நெல் ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கின. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.