நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மோகனூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினசரி 1000க்கும் மேற்பட்டோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கும் விதமாக மருத்துவமனை வளாகத்திற்குள் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களின் வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வரும் செவிலியர்கள், பணியாளர்கள், சிகிச்சைக்கு வருபவர்கள் என அனைவரும் தங்களது வாகனங்களை மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் அப்படியே நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்து முன்னணி ஆதரவாளர் இறுதி ஊர்வலத்தால் வாகன நெரிசல்!