நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் தினசரியாக 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்களுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.4.25 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.23) திடீரென ஒரே நாளில் 20 காசு குறைத்து ரூ.4.05 காசாக விலை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த திடீர் விலை குறைப்பு குறித்து கோழிப்பண்ணையாளர்களிடம் கேட்ட போது, பொதுவாக குளிர் காலத்தில் முட்டையின் தேவை, விற்பனை அதிகரிக்கும். ஆனால், இந்தாண்டு கேரளா உள்பட ஒன்பது மாநிலங்களில் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் முட்டையின் நுகர்வும்,விற்பனையும் வெகுவாக குறைந்து வருகிறது.
பிற மண்டலங்களில் முட்டையின் விலை குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் இல்லாத நிலையிலும் கூட வேறு வழியின்றி முட்டை விலை குறைக்கப்படுகிறது. வரும் நாட்களிலும் முட்டை விலை குறையும் என பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கனமழையால் ராமநாதபுரத்தில் 89 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் பாதிப்பு!