ETV Bharat / state

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை ரூ. 5.25 காசுகளுக்கு விற்பனை - namakkal district news

நாமக்கல்: மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை இன்று 20 காசுகள் அதிகரித்து ரூ. 5.25 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை உயர்வு

author img

By

Published : Oct 3, 2020, 12:46 PM IST

நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் ஆறு கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினசரியாக ரூ. 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யக்கூடிய முட்டைகளுக்கான விலையை தினசரி நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்துவருகிறது.

அதன்படி ரூ.5.05 இருந்த ஒரு முட்டையின் விலையை இன்று (அக்.3) திடீரென 20 காசுகள் அதிகரித்து ரூ. 5.25 காசுகளுக்கு விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்ற மூன்று ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விலையாகும். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவரான சிங்குராஜிடம் கேட்டபோது, "கரோனா நோய் தொற்றால் முழு ஊரடங்கு அமலில் இருந்த கால கட்டத்தில் நாமக்கல் மண்டலம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழி குஞ்சுகளின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தோம்.

ஆனால் தற்போது சென்ற இரண்டு மாத காலமாக முட்டை விற்பனை அதிகரித்து வருவதோடு, சத்துணவிற்கும் முட்டைகள் செல்கின்றன. மேலும் டெல்லி போன்ற வட மாநிலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் முட்டை உற்பத்தியில் சுமார் ஐந்து கோடி குறைந்துள்ளன. நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி முட்டைகள் உற்பத்தியில் குறைந்துள்ளன.

மேலும் கோழி தீவனங்களான சோயா, சூரிய காந்தி உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, முட்டைகளின் உற்பத்தி செலவு அதிகரிப்பு இந்த விலை ஏற்றத்திற்கு காரணம். வரும் காலங்களிலும் முட்டை விலை தொடர்ந்து உயரும்" என்றார்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.