ETV Bharat / state

நாமக்கல்லில் முட்டை விலை குறைவு

நாமக்கல்: நுகர்வை அதிகரிக்கச் செய்யும்பொருட்டு முட்டை விலை 15 காசுகள் குறைத்து ரூ.4.75 ஆக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை
முட்டை விலை
author img

By

Published : Oct 28, 2020, 3:20 PM IST

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை நான்கு ரூபாய் 90 காசுகளிலிருந்து 15 காசுகள் குறைத்து நான்கு ரூபாய் 75 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

அக்டோபர் 3ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கோழிப் பண்ணை வரலாற்றில் அதிகபட்சமாக ஐந்து ரூபாய் 25 காசுகளாக நிர்ணயம்செய்யப்பட்டது.

இது அதிகபட்ச விலை என்பதால் முட்டை நுகர்வு வெகுவாக குறைந்து. அக்டோபர் 15ஆம் தேதி ஒரேநாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டு 5 ரூபாயாகவும், அக்டோபர் 23ஆம் தேதி 10 காசுகள் குறைக்கப்பட்டு நான்கு ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனைசெய்யப்பட்டது.

இருந்த போதிலும் விலை அதிகமாக இருந்ததால் விற்பனை கடுமையான வீழ்ச்சி அடைந்தது. முட்டைகள் நுகர்வு குறைந்ததால் உற்பத்தி அதிகளவு தேக்கம் அடைந்தது.

இந்நிலையில், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இன்று (அக். 28) மேலும் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 15 காசுகள் குறைத்து நான்கு ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம்செய்யப்பட்டது.

இவ்விலை வரும் நாள்களில் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.