நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 50 காசுகளிலிருந்து 15 காசுகள் குறைத்து 3 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி 3ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளாக இருந்த நிலையில், 10 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் 15 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது,
விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, ”தற்போது வட மாநிலங்களில் முட்டை விற்பனை மந்தம் ஏற்பட்ட நிலையில் அங்கு கடுமையாக விலை சரிந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, முட்டை தேக்கம் ஏற்பட்டு விற்பனை சரிந்ததால், விற்பனையை அதிகரிக்க விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "கண்டம் விட்டு கண்டம் தாண்டி பரவும் கொரோனா வைரஸ் தாக்குதல்" - வாளையாரில் விழிப்புணர்வு