நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியின் 1971-1976 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த பழனிவேலன் பதவி வகித்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோப்பண்ணபாளையத்தைச் சேர்ந்த இவருக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தந்தை பெரியார் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
1950களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இவர் 1961 முதல் 1966 வரை திமுக வட்ட செயலாளராகவும், நாமக்கல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது 1987 முதல் 1992 வரை முதல் நகராட்சி தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பழனிவேலன் நேற்று (ஜன. 27) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
மறைந்த பழனிவேலன் உடலுக்கு பரமத்திவேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கேஎஸ் மூர்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், திமுகவைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க...'பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக ஏமாற்றாதீர்கள்' - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!