ETV Bharat / state

ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி - பாதுகாப்பு உடை அணியாமல் படகுசவாரி செய்ய தடை!

நாமக்கல்: ஈ டிவி பாரத் செய்தியின் எதிரொலியாக நாமக்கல் கமல் ஆலய குளத்தில் பாதுகாப்பு உடை (லைஃப் ஜாக்கெட்) அணியாமல் படகு சவாரி செய்ய தடை செய்யபட்டுள்ளது.

Life jacket
author img

By

Published : Oct 10, 2019, 11:19 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட நகரின் மையப்பகுதியில் கமலாலய குளம் உள்ளது. உள்ளூர் மக்களின் பொழுது போக்கிற்காகக் குளத்தின் அருகே பூங்கா அமைக்கப்பட்டு, குளத்தில் படகு சவாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

Boat Ride Banned In without Life Jacket
நாமக்கல் கமலாலய குளம்

குளத்தில் துடுப்பு, பெடல் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகக் குளத்தில் படகு சவாரியானது எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமலும், சவாரி மேற்கொள்பவர்கள் லைஃப் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை இல்லாமலும் சவாரி மேற்கொண்டு வந்தனர். அப்போது பலர் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்துக் கொண்டும் படகு சவாரி மேற்கொண்டனர்.

ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகம், தொடர்ந்து மூன்று முறை செய்தியாக வெளியிட்டது. அதன் எதிரொலியாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் நேற்று நாமக்கல் கமலாலய குளத்தில் படகு சவாரி மேற்கொள்பவர்கள் கட்டாயம் லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்றும், இரவு நேரப் படகு சவாரியைத் தடை செய்தும் உத்தரவிட்டார்.

பாதுகாப்பு உடை அணிந்து படகு சவாரி தொடக்கம்

இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் நாமக்கல் கமலாலய குளத்தில் படகு சவாரியில் ஈடுபடுவோர்க்கு லைஃப் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உடை அணிந்த பிறகே படகினுள் ஏற அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் பரவும் டெங்கு காய்ச்சல் - பீதியில் பொதுமக்கள்!

Intro:ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி... நாமக்கல் கமலாய குளத்தில் பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) அணியாமல் படகு சவாரி செய்ய தடை
Body:நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நகரின் மையப்பகுதியில் கமலாலய குளம் உள்ளது. உள்ளூர் மக்களின் பொழுது போக்கிற்காக குளத்தின் அருகே பூங்கா அமைக்கப்பட்டு, குளத்தில் படகு சவாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குளத்தில் துடுப்பு மற்றும் பெடல் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குளத்தில் படகு சவாரியானது எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமலும், சவாரி மேற்கொள்பவர்கள் லைப் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு கவசமும் இல்லாமல் சவாரி மேற்கொள்ளப்பட்டு வந்தனர். அப்போது பலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து கொண்டும் படகு சவாரி மேற்கொள்கின்றனர். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனை ஈ டிவி பாரத் தொடர்ந்து மூன்று முறை செய்தியாக வெளியிடப்பட்டது.

அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் நேற்று நாமக்கல் கமலாய குளத்தில் படகு சவாரி மேற்கொள்பவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய உத்தரவிடுவதோடு, இரவு நேர படகு சவாரியை தடை செய்யவும் உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நாமக்கல் கமலாய குளத்தில் படகு சவாரியில் ஈடுபடுவோர்க்கு லைப் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உடை அணிந்த பிறகே படகினுள் ஏற அனுமதிக்கபடுகிறது. இதன் காரணமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.