நாமக்கல்: நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று (ஜன. 31) முதற்கட்ட பயிற்சி வகுப்பு நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர். புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், பட்டணம் ஆகிய பேரூராட்சி பகுதி வாக்கு சாவடிகளில் பணியாற்றும் 297 அலுவலர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
டிமிக்கி கொடுத்த ஆசிரியர்கள்
இதுகுறித்து ஆட்சியர் கேள்வி எழுப்புகையில் அலுவலர்கள், வயிற்று வலி என்றும், சிலருக்கு கரோனா என்றும், சிலர் பக்கத்து அறையில் உள்ளார்கள் என்றும் சாக்கு போக்குகளை சாமளிக்க முயன்றனர்.
காரணம் கூறியதால் கடிந்துகொண்ட ஆட்சியர்
இதையடுத்து, ஆட்சியர் கையெழுத்து போட்டுவிட்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்காதது மிகப்பெரிய குற்றம், மேலும் நீங்கள் அதற்கு உதவாத காரணம் கூறுவது அதைவிட பெரிய குற்றம். எனவே, பயிற்சி வகுப்பில் கையெழுத்துப் போட்டு பங்கேற்காத அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை சந்தித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வராதவர்களுக்கு ஆப்சன்ட் போட்டார்.
இதேபோல், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 186 அலுவலர்களுக்கு ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அங்கேயும் இதேபோல் அதிரடி ஆய்வு செய்த நாமக்கல் ஆட்சியர், ஆசிரியர்களுக்கு ஆப்சன்ட் போட்டது குறிப்பிடத்தக்கது.