மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (டிச.27) விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெறகோரியும் நாமக்கல் பூங்கா சாலையில் கிறிஸ்தவ அமைப்புகள் அமைதிவழியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்த ஆர்பாட்டத்தில் கையெழுத்து பரப்புரையும் மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும், விவசாயத்தை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட பதாகைகள் கையில் ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், 30க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான சலுகையை, புதுச்சேரி மாணவருக்கு வழங்க இயலாது!