சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும், இன்னும் ஒரு நாளே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருப்பதாலும், இன்று ஒரே நாளில் ஆறு வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் தாக்கல் செய்தனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கால்நடை மருத்துவரான பாஸ்கரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். நால்வரில் அமமுக கட்சியின் தினகரன் ஆதரவாளரான சக்திவேல் என்பவருக்குக் கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே இறுதிநாள் என்பதால் நாளை அமமுக வேட்பாளர் சாமிநாதன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்கவேல் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனு மறுபரிசீலனை வருகின்ற 27 ஆம் தேதியும் வேட்புமனு திரும்பப் பெற 29 ஆம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.