கொல்லிமலை குண்டூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட தாம்பபாடி கிராமத்திலுள்ள சிறுவர்கள் நேற்று முன்தின இரவு புத்தாண்டு கொண்டாடியபோது, கடும் குளிரின் காரணமாக அங்குள்ள ஒரு இடத்தில் தீமூட்டியுள்ளனர்.
அப்போது அருகில் இருந்த மூட்டை ஒன்றினை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறுவர்கள் பற்ற வைத்த தீயில் போட்டிருக்கிறார். திடீரென பலத்த சத்தத்துடன் மூட்டையில் இருந்த மர்மப் பொருள் வெடித்து சிதறியது. இதில் கெளதமமணி, வேல், மணிகண்டன், சரவணன் உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த சிறுவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் சம்பவம் குறித்து வாழவந்தி நாடு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: