ETV Bharat / state

ஜார்க்கண்டில் உயிரிழந்த மாணவர் மதன்குமார் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் ரூ.3.லட்சம் நிதியுதவி..உரிய விசாரணை செய்ய ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு கடிதம் - ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு கடிதம்

ஜார்க்கண்டில் உயிரிழந்த நாமக்கல் மாணவர் மதன்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அதோடு, இது தொடர்பாக உரிய விசாரணை செய்ய வலியுறுத்தி ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tamil Nadu student Madankumar dies in Jharkhand
தமிழக மாணவர் மதன்குமார் ஜார்க்கண்ட்டில் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 9:15 PM IST

மருத்துவர் மதன் குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல்: ஜார்க்கண்ட் ராஞ்சியில் முதுகலை மருத்துவம் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மதன்குமார் கடந்த நவ.2 ஆம் தேதி மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்து மர்மமான முறையில் இறந்ததையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான நாமக்கல்லில் தகனம் செய்யப்பட்டது. மதன்குமாரின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

ஜார்க்கண்ட்டில் மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அவரது உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பலரும் மதன்குமாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார். இவர்களின் மகன் மதன்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2015-2020 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மருத்துவம் பயின்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, முதுகலை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய கோட்டாவில் ராஞ்சியில் உள்ள ரிமஸ் மருத்துவக் கல்லூரியில் தடயவியல் துறையில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். மேலும், மதன்குமார் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துவந்துள்ளார்.

ஜார்க்கண்டில் உயிரிழந்த தமிழக மாணவர் மதன்குமார்: இந்நிலையில் மாணவர் மதன்குமார், கடந்த நவ.2 ஆம் தேதி அதிகாலையில் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள உள்ள 4வது தளத்தில் இருந்து தீயில் எரிந்தபடி மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மதன்குமாரின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதன்குமார் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மதன்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த மாணவர் மதன்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடற்கூராய்வு முடிவடைந்த பின்னர் மாணவர் மதன்குமார் உடலை ராஞ்சியில் இருந்த தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.

மாணவர் உடல் தகனம்: மேலும் மாணவர் மதன்குமாரின் உடலுக்கு சொந்த ஊரான வேலகவுண்டன்ப்பட்டியில் இன்று (நவ.4) இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. மதன்குமாரின் இறுதிச்சடங்குகள் நாமக்கல் மின் மயானத்தில் நடைபெற்றது. அதில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மருத்துவ மாணவர்கள் பலர் மதன்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

அப்போது, மதன்குமார் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் மதன்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று மதன்குமாரின் உறவினர்கள், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் மருத்துவ மாணவர் மதன்குமாரின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் திரு. ம.மதன்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் திரு. @HemantSorenJMM அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும்… pic.twitter.com/kHbqzhPC8o

    — CMOTamilNadu (@CMOTamilnadu) November 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்: மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ம.மதன்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், உயிரிழந்த மதன்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேனியில் கெட்டுப்போன ஆவின் பால் விற்பனையா? கடை ஊழியர்களிடம் பொது மக்கள் வாக்குவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.