ETV Bharat / state

தாய், மகன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை; தீவிர சிகிச்சையில் தந்தை - Namakkal

பரமத்திவேலூரில் கணவன், மனைவி மற்றும் மகன் ஆகியோர் குளிர்பானத்தில்‌ விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தநிலையில், மனைவி, மகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்திவேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

author img

By

Published : Oct 5, 2021, 10:40 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூர், சுல்தான்பேட்டை சேடர் தெருவைச்சேர்ந்தவர், சையத்அக்பர் (60), இவரது மனைவி பாத்திமா (55). இவர்களுக்கு சிக்கந்தர் (33) மற்றும் பர்கத் (30) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இதில் சிக்கந்தர் தற்போது லண்டனில் வேலை பார்த்து வருகிறார். பர்கத் மட்டும் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சையத்அக்பர் நேற்று இரவு(அக்.4) குளிர்பானத்தில் விஷத்தைக்கலந்து, அவரது மனைவி பாத்திமா, மகன் பர்கத் ஆகியோருடன் சேர்ந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விஷம் குடித்து உயிருக்குப் போராடிய மூன்று பேரையும் காப்பாற்றி பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

துயரச் சம்பவம்

இதில் பாத்திமா மற்றும் அவரது மகன் பர்கத் ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதில் சையத் அக்பர் மட்டும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். கணவன், மனைவி, மகன் ஆகியோர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் தாய்,மகன் உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான‌ காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் வேறுயேதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை திட்டம் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.