நாமக்கலில் திமுக கூட்டணிக் கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து நாஞ்சில் சம்பத் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மோடி சௌகிதார் என்று செல்வதற்கு கூட தகுதி வேண்டும். காவலாளி என்ற சொல்லுக்கு பொருத்தம் இல்லாதவர் இந்தியாவிற்கு பிரதமராக உள்ளார் என சாடினார்.
மேலும், அதிமுக கூட்டணியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும், வருகின்ற தேர்தலில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும், துரோகியின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி என மத்திய, மாநில அரசுகளை மிகக்கடுமையாக விமர்சித்தார்.