நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர். சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, மாவட்டத்தில் பசுமை வீடு திட்டங்கள், சாலை பணிகள், குடிநீர் திட்டப் பணிகள், மின் விளக்கு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், மெதுவாக நடைபெறும் பணிகளை துரிதப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையால் கோவிட்-19 தொற்று தடுப்புப் பணிக்காக வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.
கூட்டம் முடிந்தபின்பு செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் காரில் ஏறி செல்ல முயன்ற அவர், அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை என்ற ஒற்றை பதிலை மட்டும் அளித்துச் சென்றார்.
இதையும் படிங்க: 7ஆம் தேதி ஒருமனதாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!